Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th April 2023 22:40:22 Hours

மேற்குப் படையினரால் கோனாவலவில் ஏற்பட்ட தீ அணைப்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 141 வது காலாட் பிரிகேட்டின் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் களனி பிரதேசத்தின் கோனவலயில் அமைந்துள்ள பிளாஸ்டிக் பொருட் கடையொன்றில் ஏற்பட்ட தீயை சனிக்கிழமை (15) அணைக்க உதவினர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அண்டை குடியிருப்பாளர்களின் தகவலுக்கமைய கொழும்பு தீயணைப்புப் படையுடன் 8 வது இலேசாயுத காலாட் படையணியின் 20 படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர்.