20th April 2023 20:40:13 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டிஆராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, அவர்கள் 6 வது கஜபா படையணி படையினருடன் இணைந்து நன்கொடையாளர்களின் உதவியுடன் 4000 ரூபா பெறுமதியான 23 உலர் உணவுப் பொதிகளை காயங்கேணி கிராமத்தில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சனிக்கிழமை (15) அவர்களது வீடுகளுக்குச் சென்று விநியோகித்தனர்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க திரு.கபில பிரபாத் ஜயசேகர மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கிய நிதியுதவியினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் - மற்றும் 6 வது கஜபா படையணி படையினர் இந்த திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.