09th May 2023 22:00:28 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் ‘வெசாக்’ தினத்தை முன்னிட்டு மே 04 ஹம்பாந்தோட்டை, புந்தல கனிஷ்ட வித்தியாலயத்தின் 59 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்கினர்.
பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக 12 வது காலாட் படைபிரிவின் தளபதியின் மேஜர் ஜெனரல் பிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.
பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரியின் வெளிநாட்டு பழைய மாணவர்களான திருமதி நிலாந்தி பொன்னம்பெரும மற்றும் திரு சமிந்த பொன்னம்பெரும ஆகியோரின் அனுசரனையில் 12 வது காலாட் படைபிரிவின் தளபதியின் ஒருங்கிணைப்பில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
122 வது காலாட் பிரிகேட்டின் 23 வது கஜபா படையணி படையினர் இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன், இதன் போது ஒவ்வொரு மாணவருக்கும் 2500/= பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் புத்தகங்கள், பேனைகள், பென்சில்கள், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் 12வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 23 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, சிவில் அலுவல்கள் அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.