Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2023 17:15:33 Hours

கெமுனு ஹேவா படையினரால் பாடசாலை கட்டிடம் மற்றும் நீர் பம்பி பொருத்தலும்

பாடசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, குருவிட்ட கெமுனு ஹேவா படையணியின் படையினர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் இளங்கலை பட்டதாரிகளின் அனுசரணையுடன் குருவிட்ட எக்னெலிகொட பாடசாலையின் இரண்டு கட்டிடங்களை புனரமைத்து முறைப்படி அதிகாரபூர்வமாக புதன்கிழமை (மே 03) ஒப்படைத்தனர்.

புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதியின் வழிகாட்டுதலின் பேரில் பல்கலைக்கழக குழுவினால் சேகரிக்கப்பட்ட மீதமுள்ள நிதியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு இலகுவாக குடிநீரை பெற்றுக் கொள்ளும் வகையில் நீர் பம்பி ஒன்றையும் நிறுவினர்.

கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி, நிலையத் தளபதி மற்றும் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோரால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, படையினர் மாணவர்கள் மற்றும் பாடசாலை அதிகாரிகள் திருப்திப்படுத்தும் வகையில் ஒழு கிழமைக்குள் திட்டத்தை நிறைவு செய்தனர்.

எளிமையான நடைபெற்ற விழாவில், பாடசாலை மாணவர்களின் உயர்கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் பாடசாலை எழுதுகருவிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி, விரிவுரையாளர்கள் மற்றும் இளங்கலை பட்டதாரி மாணவர்கள், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.