Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th May 2023 18:37:47 Hours

வெசாக் தினத்தை முன்னிட்டி 61 வது காலாட் படைபிரிவினரால் அன்னதானம்

பூஸ்ஸ 61 வது காலாட் படைப்பிரிவு அதன் பிரிகேட் மற்றும் படையலகுகளுடன் இணைந்து 05 மே 2023 ம் திகதி அன்னதானம் மற்றும் வெசாக் கூடு அலங்காரங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

61 வது காலாட் படைபிரிவு தலைமையகம், பிரிகேட்கள் மற்றும் படையலகுகள் இணைந்து அன்னதானம் மற்றும் தேநீர் விருந்துபசாரம் ஆகியவற்றை வழங்க தங்களின் ஒத்துழைப்பை வழங்கினர். மாலை நேரம் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எம்யு ஹேரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சீ அவர்கள், கட்டளை அதிகாரிகளுடன் இணைந்து முகாம் வளாகத்தை சுற்றிலும் ஆன வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரங்களை ஆரம்பித்து வைத்தார்.

வெசாக் நாட்களில் பார்வையாளர்களுக்கு படையினரால் வழங்கப்பட்ட அழகிய அலங்காரங்கள், சுவையான உணவுகள் மற்றும் அன்பான விருந்தோம்பல்கள் ஆகியவை கொழும்பு-காலி பிரதான வீதியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. இந்தத் திட்டம் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் ஆசீர்வாதத்துடன் முன்னெடுக்கப்பட்டது.