Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2023 21:43:34 Hours

513 வது காலாட் பிரிகேட்டின் ‘பொசன்’ நிகழ்வு

'பொசன்' தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவின் 513 வது காலாட் பிரிகேட்டின் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 16 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினர் கொல்லங்கலடி, மாவங்கலடி, கீரிமலை ஆகிய பகுதிகளில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

அதன்படி, 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபீ வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி மற்றும் 513 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம் ரிஸ்வி ராஷிக் ஆர்எஸ்பீ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் 513 வது காலாட் பிரிகேட், 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 16 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினரால் அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.