08th June 2023 20:13:55 Hours
யாழ். குடாநாட்டின் கடைக்காடு பகுதியைச் சூழவுள்ள 1500 இற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 55 வது காலாட் படைப் பிரிவின் படையினர் சனிக்கிழமை (03) ‘பொசன்’ பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பணிஸ் மற்றும் தேநீர் வழங்கினர்.
55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 55 வது காலாட் படைப்பிரிவின் படையினர்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அன்றைய தினம் யாழ் குடாநாட்டில் சேவையாற்றும் படையினருக்கு கிளிநொச்சி விகாரையின் பரிபாலன பீடாதிபதி வணக்கத்திற்குரிய இங்கிரியே தம்மாலங்கார தேரர் அவர்கள் தர்ம பிரசங்க சொற்பொழிவை நடாத்தி ஆசீர்வதித்தார். 553 வது காலாட் பிரிகேட் படையினர் இத் திட்டத்தை ஒழுங்கமைத்தனர்.
இதேவேளை, இயக்கச்சி ஏ 09 வீதியின் ஊடாக பயணித்த சுமார் 1500 பொதுமக்களுக்கு 12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் படையினர் பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களை வழங்கினர்.