11th May 2023 18:50:47 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 142 வது காலாட் பிரிகேடின் 15 வது இலங்கை பீரங்கி ட்ரோன் படையினர் வெசாக் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (மே 7) பாதுக்க, வடரெக்க 'சன்ஹிந்த' சிறுவர் இல்லத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கு சுவையான மதிய உணவு விருந்தை வழங்கினர்,
நிகழ்ச்சியின் போது, அந்த பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், அவர்கள் இசை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கி மகிழ்வித்தனர்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ,142 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜேகேஆர்பீ ஜயசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, இலங்கை 15 வது பீரங்கி ட்ரோன் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூஏஎஸ்எம் விஜயலத் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், சிறுவர் இல்ல ஊழியர்களும் கலந்துகொண்டனர்.