11th May 2023 19:35:47 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவு படையினர் ஹம்பாந்தோட்டை தெபரவெவ தேசிய பாடசாலை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் மாணவர்களுக்கான கைப்பந்தாட்டப் பயிற்சித் திட்டத்தை முன்னெடுத்தனர்.
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டபில்யூபீ ஆர்எஸ்பீ என்டீசீ அவர்களினால் செவ்வாய்க்கிழமை (9) காலை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இராணுவ கைப்பந்தாட்ட வீரர்களின் ஆதரவுடன் பயிற்சியை ஆரம்பித்து வைத்தார்.
விளையாட்டு ஆர்வமுள்ள 145 மாணவர்கள் ஆரவாரம் மற்றும் கரவொலிக்கு மத்தியில் ஆர்வத்துடன் பயிற்சி திட்டத்தில் இணைந்து கொண்டனர்.
12 வது காலாட்படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இராணுவ பயிற்றுனர்கள் அமர்வை மேற்பார்வையிட்டதுடன், விளையாட்டு மைதானத்தில் சுமார் 5 மணித்தியாலங்கள் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுடன் கலந்துகொண்டார்.