12th May 2023 18:20:46 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைப்பிரிவின் படையினரால், ஒட்டுசுட்டான் நகரில் வண்ணமயமான வெசாக் வலயம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டிடபிள்யூகேஎன் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் வெசாக் போயா தினத்தன்று (மே 05) பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைத்தார்.
641, 642, 643 வது காலாட் பிரிகேட்கள், 8 வது இலங்கை பீரங்கி படையணி, 14 வது இலங்கை சிங்கப் படையணி, 23 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 17 வது (தொ) கஜபா படையணி ஆகியவற்றின் படையினர் ஆக்கப்பூர்வமான படைப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்தியிருந்தனர். பொதுமக்களின் பார்வைக்காக, படையினரின் அந்த புதுமையான மற்றும் ஆக்கபூர்வமான ஆக்கங்களை மூன்று நாட்களுக்கும் மேலாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
அதே நாளில் படையினர் 3000 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு பனிஸ்கள் மற்றும் தேநீர் வழங்கினர்.