12th May 2023 18:25:46 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 141 வது காலாட் பிரிகேடின் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினர், பலத்த மழை காரணமாக பூகொட தெல்கொட பனன்வலக்கு அருகில் பிரதான வீதியில் முறிந்து விழுந்த பெரிய 'ஆல' மரத்தை வியாழன் (11) அகற்றினர்.
மரம் வேரோடு சாய்ந்ததால் பூகொட - தெல்கொட பிரதான வீதியின் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்ததுடன், வீதியின் இருபுறங்களிலும் அமைந்துள்ள மூன்று வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.
8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 5 அதிகாரிகள் மற்றும் 35 சிப்பாய்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன், தொம்பே பொலிஸ் நிலையத்தின் பொலிஸாரின் ஆதரவுடன் ஆல மரத்தை வீதியில் இருந்து அகற்றுவதற்கு தங்கள் உதவிகளை வழங்கினர்.
மேலும், பாதிக்கப்பட்ட மூன்று வீடுகளில் உள்ள நான்கு நபர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகி இருந்ததால் அவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு படையினர் உதவினர். வைத்திய சிகிச்சையின் பின்னர் அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது உடமைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, 14 வது காலாட் படைப்பிரிவு தளபதி, 141 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி அவர்களால் திட்டம் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டது.