Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th May 2023 18:35:46 Hours

552 வது காலாட் பிரிகேட் படையினர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கல்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவின் 552 வது காலாட் பிரிகேட் படையினர் செவ்வாய்கிழமை (9) ஆணையிறவுப் பகுதியைக் கடந்து செல்லும் ‘கதிர்காமம் பாதயாத்திரை’ பக்தர்களுக்கு குளிர்பானம் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கினர்.

ஒவ்வொரு வருடமும் தென்னிலங்கை ருஹுணு மஹா கதிர்காம ஆலயத்தின் திருவிழாவில் பங்குபற்ற யாழ் பக்தர்கள் பாத யாத்திரையை மேற்கொள்கின்றனர்.

55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி மற்றும் 552 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டிஜிஜேபிபீ தெம்பதகஹவத்த யூஎஸ்பீ பீஎஸ்சி ஆகியோர் இந்த திட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வழிகாட்டுதலை வழங்கினர்.