05th June 2023 19:18:00 Hours
பொல்ஹெங்கொட இலங்கை பொலிஸ் படையணி தலைமையகத்தினரால் மே 29 முதல் ஜூன் 02 வரை ஏற்பாடு செய்யப்பட்ட எக்ஸ்ஜே 900பீ மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகன தொடரணி கடமைகள் என்ற தலைப்பிலான ஐந்து நாள் செயலமர்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
இச் செயலமர்வானது ஒழுக்க பாதுகாப்பு பணிப்பக பணிப்பாளர் நாயகமும் இலங்கை பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏடி சொய்சா யுஎஸ்பீ எச்டிஎம்சீ எல்எஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீ்ழ், இலங்கை பொலிஸ் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எஎம்ஆர் அபேசிங்க அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
5 அதிகாரிகள் மற்றும் 37 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்குபற்றினர் மற்றும் அந்த பங்கேற்பாளர்கள் தங்கள் அறிவைப் புதுப்பித்துக்கொள்ளவும், மோட்டார் வாகனக் கடமைகளின் செயல்திறன் தொடர்பான புதுப்பிப்புகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக சம்பிரதாய கடமைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள எக்ஸ்ஜே 900பீ மோட்டார் சைக்கிள்களை கையாளுதல் தொடர்பில் பயிற்சி வழங்கப்பட்டது.
பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 02) இலங்கை பொலிஸ் படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நிலைய தளபதி அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கி செயலமர்வின் நிறைவுரையை வழங்கினார்.