Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2023 18:30:39 Hours

அம்பாறையில் வழிமுறைகளின் முறைமை மற்றும் சிரேஷ்ட தலைமைத்துவம், தொழிலான்மை மேம்பாடு பாடநெறிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஆணை அதிகாரம் அற்ற அதிகாரிகளின் வழிமுறைகளின் முறைமை பாடநெறி இல 62 மற்றும் சிரேஷ்ட தலைமைத்துவம், தொழிலான்மை மேம்பாடு பாடநெறி இல 42 என்பவற்றுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் சனிக்கிழமை (28) நடைபெற்றது.

இரண்டு பாடநெறிகளும் 4 ஜனவரி 2023 அன்று தொடங்கி மூன்று வாரங்களுக்கு நடாத்தப்பட்டன, மேலும் இரண்டு பாடநெறிகளும் தொடர்ச்சியான விரிவுரைகள், நடைமுறை பயிற்சிகள் மற்றும் தேர்வுகளை உள்ளடக்கியது. வழிமுறைகளின் முறைமை பாடநெறியை 182 ஆணை அதிகாரம் அற்ற அதிகாரிகளும், சிரேஷ்ட தலைமைத்துவ மற்றும் தொழிலான்மை மேம்பாடு பாடநெறியில் 53 சிரேஷ்ட ஆணை அதிகாரம் அற்ற அதிகாரிகளும் பின்பற்றினர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் சிண்ணங்கள் வழங்கப்பட்டன.

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் கமால் டி சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் இரண்டு சந்தர்ப்பங்களிலும் நிறைவுரைகளை ஆற்றியதோடு கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

3 வது இலங்கை கவச வாகன படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஜிடிஎம் பெரேரா அவர்கள் வழிமுறைகளின் முறைமை பாடநெறியில் தகுதி வரிசையில் முதலிடத்தைப் பெற்றதோடு 5 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியை சேர்ந்த சார்ஜென் எஸ்எச்எம் மதுஷங்க சிரேஷ்ட தலைமைத்துவ, தொழிலான்மை மேம்பாட்டு பாடநெறியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.