Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2023 18:53:39 Hours

144 வது காலாட் பிரிகேட் படையினரால் இயற்கை பேரழிவு தடுப்பு

மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கடுவெல தெடிகமுவ பகுதியில் காணப்பட்ட, அபாயகரமாக தொங்கிக்கொண்டிருந்த பாரிய கற்பாறையை மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 144 வது காலாட் பிரிகேடின் கீழுள்ள 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையினர், பாதுகாப்பாக அகற்றினர்.

இப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் வாழும் பகுதியில், மழை தொடர்ந்தால், பாரிய பாறை சரிந்து, பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பன,குறித்த பகுதியில் உள்ள மக்கள் அனர்த்த முகாமைத்துவ மையத்திற்கு அறிவித்ததை அடுத்து அதனை அகற்றுவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் இராணுவத்தின் உதவியை நாடியது.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல மற்றும் 144 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் விந்தன கொடித்துவக்கு ஆகியோரின் வழிகாட்டலின் பேரில் 144 வது காலாட் பிரிகேட் படையினர் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூஎம்எஸ் குமார அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் இரண்டு மணி நேரத்திற்குள் கற்பாறையை அகற்றினர்.

அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் இந்த திட்டத்திற்கு ஆதரவளித்தனர்.