Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th January 2023 23:50:49 Hours

231 வது காலாட் பிரிகேடினரால் மங்களகம மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கல்

231 வது காலாட் பிரிகேடின் 11 வது இலங்கை சிங்கப் படையணி படையினர் மங்களகம பிரதேசத்தில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கான தொடர் நன்கொடை நிகழ்ச்சிகளை செவ்வாய்கிழமை (ஜனவரி 17) மங்களகம ஸ்ரீ தர்மராம விகாரையில் ஏற்பாடுசெய்தனர்.

இந்நிகழ்வின் போது 61 பொதுமக்களுக்கு புத்தர் சிலைகளும் போதி பூஜை சுலோக புத்தகங்கள் வழங்கியதுடன், மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டன. பின்னர், அந்த மாற்றுதிறனாளிகளுக்கு தலா ரூ. 10,000.00, மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உலர் உணவுகளும் வழங்கப்பட்டன. அதே சந்தர்ப்பத்தில் தொடர்ச்சியாக படுக்கையில் உள்ள மாற்றுதிறனாளி ஒருவருக்கு மெத்தையொன்றும் வழங்கப்பட்டது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பின் ஊடாக ‘மனுசத் ஹதவத்த’ மற்றும் ‘தஹமல’ சமூக சேவை அறக்கட்டளைகள் இணைந்து வழங்கிய அன்பான அனுசரணையுடன் இந் நிகழ்வு நடைப்பெற்றது. கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டாரவின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் 231 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மேஜர் டி.எம்.என் பத்மசிறி மற்றும் 11 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரியின் தலைமையில் படையினர் இந் நிகழ்வினை முன்னெடுத்தனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார கலந்துகொண்டதுடன் ‘மனுசத் ஹதவத்த’ அறக்கட்டளையின் இணைப்பாளர் திருமதி சசிகலா குணரத்ன, ‘தஹமாலா’ அறக்கட்டளையின் இணைப்பாளர் திருமதி நதீ சமரசிங்க, 231 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 11 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.