Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையணிகளுக்கிடையிலான கராத்தே சாம்பியன்ஷிப்பில் போட்டியில் 452 இராணுவ வீரர்கள்

இராணுவத்தின் 18 படையணிகளுக்கிடையே வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் நடைப்பெற்ற கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் 452 வீரர்கள் போட்டியிட்டனர். இப்போட்டியானது இராணுவ கராத்தே கழக தலைவரும் இலங்கை இராணுவ பொலிஸ் சேவை படையணி படை தளபதியுமான மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் முன்னிலையில் நடைப்பெற்றது.

ஜனவரி 10 முதல் 13 வரை நடைபெற்ற மூன்று நாள் போட்டித் தொடரில் போட்டியாளர்கள் சீரேஷ்ட பட்டி (கருப்பு மற்றும் கபிலம்), கனிஷ்ட மற்றும் புதியவர்களுக்கான போட்டிகளில் போட்டியிட்டனர். இறுதிப் போட்டியிலும் பரிசளிப்பு விழாவிலும் வடக்கு முன்னரங்க பாராமரிப்பு பகுதி தளபதி பிரிகேடியர் கிளிபோர்ட் டி சொய்சா அவர்களும் கலந்துகொண்டார்.

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 107 பதக்கங்களைப் பெற்று முதலாமிடத்தினையும் இலங்கை சிங்க படையணி 80 பதக்கங்களை பெற்று இராண்டாமிடத்தினையும் பெற்றனர். இதேவேளை, பெண்கள் பிரிவில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி 95 பதக்கங்களுடன் முதலாமிடத்தினையும் 60 பதக்கங்களுடன் இலங்கை சமிஞ்சை படையணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

தனிநபர் சிறப்பு திறன்கள்

சிறந்த வீரர் (ஆண்கள்) – சிப்பாய் எச்விஎச் செனரத் - இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி

சிறந்த வீராங்கனை –சிப்பாய் என்யுடி பெரேரா - இலங்கை இராணுவ மகளிர் படையணி