29th December 2022 21:07:23 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக புதிதாக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுவர்ண பொத்தோட்ட அவர்கள் அண்மையில் பதவியேற்றதன் பின்னர் அனைத்து மத தலைவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும் நோக்குடன், நைனத்தீவு நாக விகாரை, யாழ். ஆயர் மற்றும் யாழ். நல்லூர்கோவில் ஆகிய இடங்களுக்கு சென்று மதகுருமார்களை 2022 டிசம்பர் 27 சந்தித்தார்.
யாழ். தளபதி நைனத்தீவு புராதன ரஜமஹா விகாரையில் பிரதம தேரர் அதிவண. நவதகல பதுமகிட்டி திஸ்ஸ தேரர், நாக விகாரை பிரதம தேரர் அதிவண. மீகஜந்துரே சிறிவிமல தேரர், யாழ் ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் பி ஞானப்பிரகாசம், நல்லூர் ஆதின முதல்வர், யாழ். ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரஞானசம்பந்தப் பிரமாச்சாரியர் ஆகியோரை சந்தித்தார்.
இவ் விஜயத்தின் போது யாழ் தளபதியுடன் 51 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.