Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st December 2022 19:55:23 Hours

முல்லைத்தீவு படையினர் துறவியின் அனுசரணையுடன் கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகம்

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, பௌத்த பிக்குகள் மற்றும் 'சரண' அறக்கட்டளையின் அனுசரணையுடன் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவின் 593 வது பிரிகேட் படையினர் நாயாறு கொஹோம்பகஸ் சந்தி பொது மைதானத்திற்கு பொதுமக்களை அழைத்து திங்கட்கிழமை (28) உலர் உணவுப் பொதிகள் மற்றும் மண்வெட்டிகளை வழங்கினர்.

திருமதி எஸ் விஜேவர்தன தலைமையிலான 'சரண' அறக்கட்டளையுடன் இணைந்து சிங்கப்பூரில் வசிக்கும் வண. நகுலகமுவ சுமண தேரர் இந்த திட்டத்திற்கு அனுசரணை வழங்கினார். அதன்படி, 50 கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா ரூ.10,000/= பெறுமதியிலான ஊட்டச்சத்து மற்றும் உலர் உணவுப் பொருட்களும் 200 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா ரூ.15,000/= பொறுமதிப்பிலான உலர் உணவுப் பொதிகளும் அப்பகுதி விவசாயிகளுக்கு 50 மண்வெட்டிகள் என்பனவும் வழங்கப்பட்டன.

593 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் குலதிலக அவர்களின் அழைப்பின் பேரில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 5 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் மற்றும் 19 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் இத்திட்டத்தில் பங்கு பங்குகொண்டனர். 593 வது பிரிகேட், குறித்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையில் இத்திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்துடன் கலந்தாலோசித்து இந்நிகழ்வுக்கு வண. நகுலகமுவ சுமண தேரர் மற்றும் ‘சரண’ அறக்கட்டளை இத்திட்டத்திற்கு நிதி அனுசரணையை வழங்கியது.

இந்நிகழ்வில் கொக்கிளாய் ஸ்ரீ சம்போதி விகாரையின் பிரதமகுருவான வண.ஹுரியகஸ்வெவ சத்தாவாச தேரர், வண.திஸ்ஸபுத்த தேரர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.