Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2022 15:49:53 Hours

இராணுவ பொறியியல் பாடசாலையின் பிஐஈடிடி - 4 மற்றும் சீபிஆர்என் - 2 பாடநெறிகள் நிறைவு

வெடிகுண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் பொருட்களை அகற்றும் பாடநெறி - இல 4 (BIEDD) மற்றும் இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி பாடநெறி - இல 2 (CBRB) ஆகியவற்றின் சின்னம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (25) எம்பிலிப்பிட்டிய இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலையில் (25) நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

வெடிகுண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் பொருட்களை அகற்றும் பாடநெறியை நிறைவு செய்த 4 அதிகாரிகள் மற்றும் 22 சிப்பாய்கள் வெடிக்கும் ஆயுதங்களை அகற்றும் (EOD) சின்னம் அணிவதற்குத் தகுதி பெற்றனர். இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி பாடநெறியை நிறைவு செய்த 4 அதிகாரிகள் மற்றும் 27 சிப்பாய்கள் சின்னங்களை பெற்றனர். இரண்டு பாடநெறிகளும் எம்பிலிப்பிட்டிய இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலையில் மூன்று மாத காலத்திற்கு ஒரே நேரத்தில் நடைபெற்றன.

நிறைவு நிகழ்வில் இலங்கை பொறியியல் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் மனோஜ் மதுரப்பெரும, பொறியியல் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திக பீரிஸ், இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலை தளபதி கேணல் சந்தன விக்கிரமநாயக்க, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

வெடிகுண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் பொருட்கள் (BIEDD) மற்றும் இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி BIEDD/CBRN பாடநெறியின் தகுதிபெற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் விபரங்கள் பின்வருமாறு:

வெடிகுண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் பொருட்கள் (BIEDD) பாடநெறியின் அதிகாரிகள் பிரிவில் முதலிடம் - மேஜர் கேஜிஎம்எல் பிரியந்த (12 வது இலங்கை பொறியியல் படையணி )

வெடிகுண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் பொருட்கள் (BIEDD) பாடநெறியில் சிப்பாய்கள் பிரிவில் முதலாமிடம் – லான்ஸ் கோப்ரல் டிஎம் பெர்னாண்டோ (12 இலங்கை பொறியியல் படையணி)

இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பாடநெறியில் அதிகாரிகள் பிரிவில் முதலிடம் - கெப்டன் பிஎச்சிடி குணதிலக்க (5 இலங்கை பொறியியல் படையணி)

இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி பாடநெறியில் சிப்பாய்கள் பிரிவில் முதலிடம் - லான்ஸ் கோப்ரல் ஜே.ஏ.எம்.எம் ஜயவர்தன (9 இலங்கை பொறியியல் படையணி)