Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2022 21:58:14 Hours

இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

கஜபா படையணியின் பிரிகேடியர் துசித ஹெட்டியாராச்சி அவர்கள் திங்கட்கிழமை (28) இரத்மலானையில் அமைந்துள்ள இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றார்.

மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது பதவி ஏற்பை அடையாளப்படுத்தினார்.

பிரிகேடியர் துசித ஹெட்டியாராச்சி இந்த நியமனத்திற்கு முன்னர் இலங்கை இராணுவ மருத்துவப் படையணி தலைமையகத்தின் நிலைய தளபதியாக கடமையாற்றினார். இப்போது இராணுவத் தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் ரோஹன் பெஞ்சமினுக்குப் பதிலாக அவர் பதவியேற்றார்.