Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd November 2022 19:30:59 Hours

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 25 வது ஆண்டு நிறைவு

பொரளை இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகம் தனது 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை இராணுவ மகளிர் படையணியின் தளபதியும் பிரதம களப் பொறியாளருமான மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் திங்கட்கிழமை (14) கொண்டாடப்பட்டது.

ஆண்டு நிறைவை முன்னிட்டு, விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான திட்டமொன்றில் படையினர், மத்தேகொட கமில பாடசாலைக்குச் சென்று பரிசுப் பொதிகள், உலர் உணவு பொதிகள், மருந்துகள், சுகாதாரப் பொருட்கள் போன்றவற்றை விநியோகித்தனர். கொழும்பு 07 றோயல் கல்லூரியின் ஆண்கள் சங்கம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்றியம் மற்றும் 'நிரோகிகம அகயன சகல ஸ்ரீலங்காவாசி / லோகவாசி மிதுருகல'வின் நிதி திரட்டும் குழுவின் உறுப்பினர்கள், பேராசிரியர் சமந்தி சேனாரத்ன, செல்வி நிலுகா விக்ரமராச்சி பீரிஸ், செல்வி இஷாகா லியனராச்சி மற்றும் செல்வி கௌசல்யா ஜயதிலக்க ஆகியோர் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கினர்.

நிகழ்ச்சியின் முடிவில் குழந்தைகளுக்கு இசை நிகழ்சியுடன் ,சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி, இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி , நிலைய தளபதி மற்றும் அவரின் பாரியார் மற்றும் ஏனைய நன்கொடையாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆண்டு நிறைவு நாளில் (15), சம்பிரதாயமான பாதுகாப்பு மரியாதை வழங்குவதற்கு முன்னர் மகா சங்க உறுப்பினர்களுக்கு காலை உணவு (ஹீல் தானம்) வழங்கப்பட்டதுடதை தொடர்ந்து படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன அவர்களுக்கு பாதுகாப்பு அறிகையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை என்பன வழங்கப்பட்டன. இராணுவ வீராங்கனைகளின் பங்களிப்புடன் போதி பூஜை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டனர்.