Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2022 19:47:56 Hours

552 வது காலாட் பிரிகேட் படையினரால் யாழ். இயக்கச்சி பாடசாலையில் பன்முக நிவாரணத் திட்டம்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம், யாழ்ப்பாணப் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சமூக நலம் சார்ந்த திட்டங்களைத் தொடரும் அதே வேளையில், ஞாயிற்றுக்கிழமை (20) இயக்கச்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை வளாகத்திற்கு பயனாளிகளை வரவழைத்து சுமார் 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான பன்முகச் நிவாரண சேவைகளை வழங்கியது.

இத்திட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஊட்டச்சத்துக்களுடன் கூடிய 100 உலர் உணவுப் பொதிகள் வழங்குதல், மாணவர்களுக்கு 100 ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதிகளை பரிசாக வழங்குதல், விவசாயத் தேவைகளுக்காக விவசாயிகளுக்கு 90 துணைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இலவசமாக வழங்குதல் மற்றும் 20 மாணவர்களுக்கு பரிசாக பாடசாலை பைகள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்குதல் என பல வழங்கப்பட்டன.

திரு பிரசாத் லொகுபாலசூரிய தனது ‘அருணலு’ நிகழ்ச்சியின் 3 ஆம் கட்டத்தின் கீழ், திருமதி சமந்தி விஜேவர்தன, திரு திலின மென்டிஸ், திரு சத்து கஹவல, திரு நியோமல் ஜனப்ரிய, செல்வி டிலந்தி குணரத்ன, திரு தினேஷ் கயான் மற்றும் திரு குமுது குணவர்தன ஆகியோர் இணைந்து இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கினர்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி வழங்கிய வழிகாட்டுதலின் கீழ், 55 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, 552 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜயநாத் ஜயவீர, ஆகியோரின் கருத்துருவின் அடிப்படையில் 552 வது காலாட் பிரிகேடின் படையினர் இந்த திட்டத்தை ஏற்பாடு செய்தார்.

முதலாவது இயந்திரவியல் காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏ.சி.ஆர் திலகரத்ன மற்றும் 23 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, மேஜர் ஆர்.எம்.ஆர்.பி.ரத்நாயக்க ஆகியோர் இந்த திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு முக்கிய பங்காற்றினர்.

மனிதாபிமான திட்டத்தின் முடிவில், இயக்கச்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் அதன் நடனக் கலைஞர்களுடன் அவர்களின் இசைக்குழுவினர் தங்கள் அழகியல் திறன்களை வெளிப்படுத்தி இந்நிகழ்வினை மகிழ்வித்தனர்.