Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2022 18:30:56 Hours

211 வது காலாட் பிரிகேட் படையினரால் மாணவர்களுக்கான குடிநீர் திட்டம்

அநுராதபுரம் மாவட்டத்தின் இரண்டு முன்னணிப் பாடசாலைகளின் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கும் சமூகம் சார் திட்டம் 21 வது காலாட் படைப்பிரிவின் 211 வது காலாட் பிரிகேட் படையினர், தனியார் நிறுவனம் ஒன்றின் அனுசரணையுடன் திங்கட்கிழமை (நவம்பர் 14) ஆரம்பித்தனர்.

211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜயரத்ன அவர்களின் வேண்டுகோளின் பேரில், வரையறுக்கப்பட்ட பொடிலைன் கார்மென்ட்ஸ் (தனியார் ) நிறுவனம், வல்பொல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுமார் 195 மாணவர்களின் பயன்பாட்டிற்கான குடிநீர் சுத்திகரிப்பு கருவி நிறுவுவதற்கு அதன் அனுசரணையை வழங்கியது. மேலும் இந்த பகுதியில் குடிநீர் காரணமாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படக்கூடியதாக காணப்பட்டமையால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேபோன்று, அதே அனுசரணையாளரினால் ஈரற்பெரியகுளம் பெரகும் பாடசாலையில் தற்போதுள்ள நீர் சுத்திகரிப்பு முறைமை சில தொழில்நுட்ப குறைபாடுகளால் செயலிழந்திருந்ததால், 211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜயரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் அக்கருவியை பழுதுபார்ப்பதற்கு உதவி வழங்கப்பட்டது. 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் படையினர்கள் இரண்டு திட்டங்களை முன்னெடுக்க தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கினர்.

வரையறுக்கப்பட்ட பொடிலைன் கார்மென்ட்ஸ் (தனியார்) நிறுவனத்தின் உதவி முகாமையாளர் (நிர்வாகம்) திரு சதுர் மற்றும் அவரது குழுவினர், 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, 211 வது காலாட் பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, சிப்பாய்கள் மற்றும் பாடசாலை சமூகம் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.