Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2022 19:00:56 Hours

இராணுவ உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

இலங்கை சமிஞ்சை படையணியின் பிரிகேடியர் அஜித் விக்கிரமசேகர இராணுவத் தலைமையகத்தின் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக திங்கட்கிழமை (21) பதவியேற்றார்.

புதிய பணிப்பாளர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டார். பணிப்பக பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இதில் கலந்துக் கொண்டனர்.

தற்போது தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாடநெறி ஒன்றினை தொடரும் பிரிகேடியர் நசீர் மஜீத் அவர்களுக்கு பதிலாக இவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.