Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2022 17:41:14 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படை தலைமையகத்தில் நிர்வாகம் தொடர்பான பாடநெறி நிறைவு

நிர்வாகம் தொடர்பாக சகல தரத்தினரின் அறிவு திறனை மேம்படுத்தி கொள்ளும் நோக்கத்துடன் 38 பயிற்சியாளர்களுக்கு 'அலுவலக நிர்வாக உதவிப் பாடநெறி - 88' இலங்கை இராணுவத் தொண்டர் படை தலைமையகத்தில் இடம் பெற்றது. இப் பாடநெறியின் பரிசளிப்பு நிகழ்வானது இலங்கை இராணுவத் தொண்டர் படை தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் தலைமையில் சனிக்கிழமை (8) நடைபெற்றது.

2022 ஜூலை 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை திறன் அடிப்படையிலான பாடத்திட்டத்தின் கீழ் இந்தப் பாடத்திட்டம் தொடங்கப்பட்டு, தேசிய தொழிற்கல்வித் தகுதி நிலைகள் 3 மற்றும் 4 க்குத் தகுதி பெற்றுள்ளது.

இப் பாடநெறியில் இலங்கை இராணுவ மகளிர் படையிணியின் பெண் சிப்பாய்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியான இராணுவத் தொண்டர் படை தளபதியுடன் இணைந்து இராணுவத் தொண்டர் படையின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் துசித சில்வா, இராணுவத் தொண்டர் படை பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் ஜேஏஜே ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.