Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2022 17:45:35 Hours

ஊடக பணிப்பகம் சிவில் விவகார அதிகாரிகளின் பாடநெறியில் விரிவுரை

பனாகொடவில் உள்ள பொறியியலாளர் சேவைப் படையணியில் இடம்பெற்ற சிவில் விவகார அதிகாரிகளின் பாடநெறி எண்-21 இல் கலந்துகொண்டவர்களுக்கு இராணுவத் தலைமையகத்தின் ஊடக பணிப்பகத்தின் கேணல் ஊடகம் கேணல் தம்மிக்க அதிகாரி அவர்களால் செவ்வாய்க்கிழமை (18) சிறப்பு விரிவுரை நிகழ்த்தப்பட்டது.

இரண்டு வார காலப் பாடநெறியானது உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இவ் விரிவுரையில் பல படையணிகளை சேர்ந்த 24 அதிகாரிகள் கலந்துகொண்டனர். சிவில் வாழ்க்கைக்கும் இராணுவ வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாடு, சிவில்-இராணுவ உறவுகள், சிவில் விவகார மேலாண்மை, சிவில் மற்றும் இராணுவ நடத்தை முறைகள் மீதான தீர்ப்பு, சிவில் ஒத்துழைப்பைத் அணுகுதல், மனிதாபிமான திட்டங்களை நடத்தல், இராணுவத்தின் நற்பெயரை மேம்படுத்துதல் மற்றும் மக்கள் நட்பு அமைப்பாக அதன் அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இவ்விரிவுரை இடம் பெற்றது.

கேணல் தம்மிக்க அதிகாரி அவர்களின் விரிவுரையின் முடிவில், கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கதாகும்.