Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th August 2022 17:52:00 Hours

கந்தகாடு பண்ணையில் ஊறுகாய் வெள்ளரி பயிர்ச்செய்கை

ஹெய்லிஸ் குழும நிறுவனங்களின் வரையறுக்கப்பட்ட H.J.S Condiments நிறுவனத்துடன் கந்தகாடு இராணுவப் பண்ணையானது இணைந்து 1500 ஏக்கர் கைவிடப்பட்ட அரச காணிகளில் இராணுவத்தின் உணவுப் பாதுகாப்புப் பயிர்ச்செய்கையின் கீழ் ஒரு புதுமையான திட்டமாக ஊறுகாய் வெள்ளரி விவசாய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த திட்டமானது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் தளபதியும் இராணுவத்தின் நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இராணுவத்திற்கு சாத்தியமான அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கிய வரையறுக்கப்பட்ட H.J.S Condiments நிறுவன ஆலோசகர்கள் முன்னிலையில் இந்த திட்டம் சனிக்கிழமை (6) ஆரம்பிக்கப்பட்டது.

ஊறுகாய் செய்யப்பட்ட வெள்ளரி, பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் பிரபலமான சுவையான உணவுப் பொருளாக காணப்படுவதுடன் நாட்டின் வறண்ட பகுதிகளில் உள்ள அனைத்து தன்வெப்ப நிலைகளும் சரியான முறையில் உற்பத்தி செய்யப்பட்டால், சிறந்த விளைச்சலைப் பெறுவதற்கு ஏதுவாக இருப்பதால், அதிக அளவில் அன்னியச் செலாவணியை பெற்றுக் கொள்ளலாம்.

வரையறுக்கப்பட்ட H.J.S Condiments நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பணிப்பாளர் திரு ஆனந்த பத்திரகே மற்றும் விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷ ராஜபக்ஷ, நிதி முகாமைத்துவ பணிப்பாளர் திரு ஆசிரி ஜயபோதி, 3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் படையினர் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.