Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சின்னவத்தை பிரதேசத்தில் 116 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள்

23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பனதாரவினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, 11 வது (தொ) சிங்க படையணி படையினரால் வெள்ளிக்கிழமை (15) மட்டக்களப்பு சின்னவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 116 ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

231 வது பிரிகேட் தளபதியின் ஒருங்கிணைப்பின் பேரில், அந்த மக்களின் வறிய வாழ்க்கை நிலைமையை வெளிநாட்டைச் சேர்ந்த திரு சுரங்க புஷ்பகுமார மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் கவனத்திற்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து அந்த நன்கொடையாளர்களின் குழுவினால் இதற்கான அனுசரணை வழங்கப்பட்டது.

6000/= பெறுமதியான அரிசி, பருப்பு, சோயா இறைச்சி, மாவு, தானியங்கள், மசாலாப் பொருட்கள், கறுவாடு போன்றவற்றை உள்ளடக்கிய ஒவ்வொரு நிவாரணப் பொதியும் தகுதியான பயனாளிகளைத் தெரிவு செய்ததன் பின்னர் படையினரால் அவர்களது வீட்டு வாசலுக்கு சென்று வழங்கப்பட்டது.

231 வது பிரிகேட் தளபதியுடன் 11 (வது) இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி மேஜர் எம் டப்ளியூ எம் உதயகுமார, அதிகாரிகள் மற்றும் படையினர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.