Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

அனுசரனையாளரின் உதவியுடன் மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினர் நிவாரண பொதிகள் வழங்கல்

ஊவா - பரணகம பிரதேச செயலகப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களின் பொருளாதாரச் சிரமங்களைப் போக்கும் நோக்குடன் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் வெள்ளிக்கிழமை (15) தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை இலவசமாக விநியோகித்தது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வாவின் வேண்டுகோளுக்கினங்க அரிசி, பருப்பு, வெங்காயம், சீனி, பிஸ்கட், சோயா இறைச்சி, மசாலாப் பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய 568,000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் கொழும்பில் வசிக்கும் பிரபல வர்த்தகரும் நன்கொடையாளருமான திரு கோபி அவர்களால் அனுசரணை வழங்கப்பட்டது.

அவ் 200 உலர் உணவுப் பொதிகள் ஊவா-பரணகம பிரதேச செயலக வளாகத்தில் வழங்கப்பட்டதுடன் அந் நிகழ்வில் அனுசரனையாளரான திரு கோபி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, ஊவா-பரணகம பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் என்போர் கலந்துகொண்டனர்.