Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2022 15:10:52 Hours

இராணுவ ஊடகப் பேச்சாளரிடமிருந்து 'ஊடகங்களும் இராணுவமும்' என்ற தலைப்பில் விரிவுரை

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, அவரகளின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவ ஊடகப் பணிப்பாளரும் இராணுவ ஊடகப் பேச்சாளருமான பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன அவர்களினால் கடந்த புதன்கிழமை (6) இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கும் 'ஊடகங்களும் இராணுவமும்' என்ற தலைப்பில் ஒரு முக்கியமான விரிவுரையினை நடாத்தினார். இங்கு வெகுஜன ஊடகங்களின் பயன்பாடு மற்றும் இராணுவத்தினரால் உரிய நேரத்தில் அதன் செல்வாக்கு போன்ற சில விஷேட விடயங்களை மையப்படுத்தி ஊடக பாவனை பற்றிய உண்மைகளை விளக்கினார்.

விரிவுரையில், அவர் ஊடகத்தின் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள், சமூகத்திற்காக வீரர்களின் பொறுப்புகள், பொது உணர்வு முகாமைத்துவம், ஊடகம் மற்றும் இராணுவ உறவுகள், சமூக ஊடக ஆச்சாரங்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் மற்றும் அது பொதுமக்களுடன் கையாளும் விதம் என்பவை உள்ளடங்கியதாக காணப்பட்டது. குறிப்பாக தற்போதைய தீர்க்கமான மற்றும் பொருளாதார நெருக்கடியான சூழலில் இலங்கை இராணுவத்தின் நன்மதிப்பினை மேம்படுத்தும் முயற்சியில் தவறான தகவல்கள் மற்றும் தவறான தகவல்களுக்கு பலியாகாமல் இருப்பதன் முக்கியத்துவத்தையும், ஊடகங்களின் சரியான நிர்வாகத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட 175 இற்கும் மேற்பட்ட படையினர் விரிவுரையை செவிமடுத்ததோடு, கேள்வி-பதில் அமர்வுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.