Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th July 2022 15:48:19 Hours

படையினருக்கான 'தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை பாடநெறி அம்பாறையில் நிறைவு

சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட 'தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை பாடநெறி-39 இன் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை (5) அம்பாறை போர்ப் பயிற்சிக் கல்லுரியில் நிறைவுபெற்றது.

அம்பாறை போர் பயிற்சி கல்லூரியின் தளபதி பிரிகேடியர் ரொஷான் ஜயமான்ன அவர்கள் நிறைவுரை ஆற்றினார். மொத்தம் 79 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இந்த 3 வார பாடநெறியைப் பயின்றனர். பாடநெறியின் சிறந்த மாணவராக முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியைச் சேர்ந்த சார்ஜன் டபிள்யூ.டி.இந்திரஜித் உதய தெரிவு செய்யப்பட்டார்.

இந் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.அத்துடன் போர் பயிற்சி கல்லூரியின் க்கடளை அதிகாரி கேணல் கமல் டி சில்வா அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தலைமைப் பண்புகளின் உண்மையான அர்த்தம், தொழிலில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள், தலைமைத்துவப் பண்புகள், தரமான அணுகுமுறைகள் மற்றும் சரியான முடிவெடுக்கும் திறன்கள், கட்டளை மற்றும் வழிகாட்டுதல் வழிமுறைகளை மேம்படுத்துதல், முன்மாதிரியான நடத்தை போன்றவை பற்றி இப்பாடநெறியில் கவனம் செலுத்தப்பட்டது.