Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2022 15:41:44 Hours

தலகல அறக்கட்டளையின் அனுசரணையுடன் 144 வது பிரிகேட் ஒருங்கிணைப்பில் 330 நிவாரணப் பொதிகளை விநியோகம்

வண. தலகல ஸ்ரீ சுமனரதன நாயக்க தேரரின் தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூர் டான் நகாக் புவே & கீ மெங் லாங் அமைப்பு ஆகியவற்றால் வழங்கப்பட்ட ஈடு இணையற்ற பெருந்தன்மையின் கீழ், மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவு 144 வது பிரிகேட் மற்றும் 2 வது(தொ) இலேசாயுத காலாட் படையணியினால் 2022 ஜூலை 01 ஆம் திகதி கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் வரிய குடும்பங்களுக்கு 330 உலர் உணவுப் பொதிகளை ஹேவாகம ஆரம்பப் பாடசாலை வளாகத்திற்கு வரவழைத்து விநியோகிக்கப்பட்டது.

144 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விந்தன கொடிதுவக்கு நன்கொடையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச செயலகத்தில் உள்ள கிராம சேவை உத்தியோகத்தர்களுடன் இணைந்து பயனாளிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கியதன் பின்னர் பாடசாலை வளாகத்திற்கு அழைக்கப்பட்ட பின்னர் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளில் அரிசி, பருப்பு, மசாலா, தானியங்கள், மாவு, கருவாடு, நூடுல்ஸ் போன்றவை உள்ளடங்கியிருந்தன.

தலகல ஸ்ரீ சுமணரதன நாயக்க தேரர், ஹேவாகம விகாரை அதிபதியான வண. மல்வான பஞ்சசார தேரர், கடுவெல பிரதேச செயலாளர், ஹேவாகம ஆரம்ப பாடசாலையின் அதிபர், 144 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விந்தன கொடிதுவக்கு, மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.