வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 56 வது படைப்பிரிவின் படையினர், வவுனியா பிரதேசத்தில் உள்ள 1 வது போகஸ்வெவ, 2 வது போகஸ்வெவ, நமல்கம, சலலிஹினிகம, நந்திமித்திரகம, கலிக்குளம், மதினாநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் 100 வரிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை 19 ஜூன் 2022 அன்று நந்திமித்ரகாம சனசமூக மண்டபத்திற்கு பயனாளிகளை வரவழைத்து விநியோகித்தனர்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய இராச்சியத்தை வசிப்பிடமாக கொண்ட 'விஸ்வ சமாதி' அமைப்பு இந்த நன்கொடையை வழங்கியது. விநியோகத்தின் போது 'விஸ்வ சமாதி' அமைப்பின் உதவிச் செயலாளர்களான திருமதி சந்திமா குருப்பு மற்றும் திருமதி சமாதி நாணயக்கார ஆகியோர் உடனிருந்தனர்.
56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமன் லியனகே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், 563 வது பிரிகேட் தளபதி கேணல் சஞ்சய பெரேரா தனது சிப்பாய்களின் ஆதரவுடன் ஒருங்கிணைத்ததுடன் இத் திட்டத்தை நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் 563 வது பிரிகேட் தளபதி கேணல் சஞ்சய பெரேரா, 56 வது படைப்பிரிவு மற்றும் 563 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, 7 வது இலங்கை சிங்கப் படையணியின் இரண்டாவது கட்டளை அதிகாரி, 7 வது இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.