கந்தளாய் பிரதேசத்தில் வீடற்ற இரு குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட மேலும் இரண்டு புதிய வீடுகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தனவினால் புதன்கிழமை (8) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பி.பி.சி வன்னியாராச்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் படையினரால் இவ்விரண்டு வீடமைப்பு திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்டன. இக் குடும்பத்தினரின் வறிய நிலமையை கருத்தில் கொண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வீடுகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
பௌத்த மத மரபுகளுக்கு அமைவாக இந் நிகழ்வின் முதல் நிகழ்வாக வீட்டின் சாவியை மாற்றுத்திறனாளி தாயாரான திருமதி ஜி.தக்ஷிலா சுபாஷினி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது. இரண்டாவது வீடு திருமதி டபிள்யூ.எம். நிலுகா பிரியங்கனிக்கு நிர்மாணிக்கப்பட்டது, அவரது இரு மகன்களும் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இச் சந்தர்ப்பத்தில், சமுக நலத்திட்டதில் மனிதாபிமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணியின் படையினரால் பயனாளிகளுக்கு வீட்டு உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, 22 வது படைப்பிரிவின் தளபதி, 222 வது பிரிகேட் தளபதி, சிவில் விவகார அதிகாரி, 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் திருகோணமலை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய முகாமையாளர் ஆகியோர் இவ் விழாவில் கலந்து கொண்டனர்.