Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd June 2022 18:14:23 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படையினருக்கு 'உயிர் பன்முகத்தன்மை' மற்றும் பசுமை செயற்பாட்டின் முக்கியத்துவம் பற்றி விளக்கம்

இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, முக்கிய சுற்றுச் சூழல் ஆர்வலர்களான பேராசிரியர் பி. நிஹால் தயாவன்ச, திரு. ஜகத் குணவர்தன மற்றும் திரு. சன்ன ஏக்கநாயக்க ஆகியோர் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தலைமையகத்தின் படையினரின் உணவகதில் திங்கட்கிழமை (21) உயிரியல்-பன்முகத்தன்மை மற்றும் பசுமை விவசாயக் கருத்துக்கள் குறித்து இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படையினருக்கு விளக்கமளிக்க அழைக்கப்பட்டனர்.

புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களான பேராசிரியர் பி. நிஹால் தயாவன்ச, திரு ஜகத் குணவர்தன மற்றும் திரு சன்ன ஏக்கநாயக்க ஆகியோர் இலங்கையின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் சட்டம், பசுமைக் கருத்து மற்றும் சூழலியல் மறுசீரமைப்பு போன்றவை சம்பந்தமாக விரிவுரைகளை நிகழ்த்தினர்.

பல்லுயிர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை விளக்கிய பிறகு, முகாம் வளாகத்தில் சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கான புதிய அணுகுமுறைகள் "இயற்கையின் ஏழு பாடங்கள்" அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு அவர்கள் அமர்வுகளின் ஒரு பகுதியாக முகாம் வளாகத்திற்குள் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்து படையினருக்கு கற்பிப்பதற்காக கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் ஷீன் குணவர்தன, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த அமர்வில் கலந்துகொண்டனர்.