Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd June 2022 20:42:11 Hours

இராணுவத் தளபதி பிரிவெனா ‘சம்புத்த ராஜ மண்டபத்தை’ திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்

இன்று (19) காலை, பெபிலியானவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சுனேத்ரா தேவி மகா பிரிவென கட்டிட தொகுதியின் தொடர் திறப்பு விழா நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே மற்றும் சகோர சேவைத் தளபதிகள் உட்பட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் சுனேத்ரா தேவி பிரிவெனத்தின் தலைவருமான வண. டொக்டர் மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரர் அவர்களின் அழைப்பின் பேரில் அவர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில், புத்தரின் தூண்கள் கொண்ட விகாரையுடனான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'சம்புத்த ராஜ மண்டபம்' அன்றைய பிரதம அதிதியான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்களால், மகா சங்கத்தினர் 'செத் பிரித்' பரயாணங்களின் மத்தியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த இரண்டு மாடிக் கட்டிடம் மரச் சிற்பங்களைக் கொண்டு அர்ஜுன் மரத்தின் (கும்புக்) மரத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் அதி வண. வரகாகொட ஞானரதனாபிதான தேரர் மற்றும் மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. கலாநிதி நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதசிறி தேரர்கள் தலைமையில் ஆரம்ப வைபவம் இடம்பெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் புதிய பிக்குகள் மற்றும் பிற மாணவர்கள் இந்த பிரிவேனாவில் மதக் கல்வியைத் தொடரும் முகமாக நிர்மாணிக்கப்பட்ட கணினித் தொழில்நுட்ப ஆய்வுகூடமானது வண. கலாநிதி நியங்கொட விஜிதசிறி தேரர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள், புதிய ஞாயிறு பாடசாலை கட்டிடத்தின் சாவியை மாணவர்களிடம் அடையாளமாக கையளித்ததுடன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் புனரமைக்கப்பட்ட பிரிவேனா கட்டிடத் தொகுதியின் சாவியை புதிய துறவியிடம் கையளித்தார். அதே நேரத்தில், விளையாட்டு மைதானத்தை திறந்து வைக்கும் முகமாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அழைக்கப்பட்டார்.

வண. கலாநிதி அபயதிஸ்ஸ தேரர் வைபவத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரை ஆற்றியதுடன், இந்த உன்னத ஆன்மிகப் பணிக்கு பல்வேறு துறைகளில் பங்களித்தவர்களுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

கல்கிஸ்ஸையில் அமைந்துள்ள வதரப்பல பௌத்தயாதனயவின் பிரதம மத தலைவர் வண. திவியகஹா யஸ்ஸஸ்ஸி நாயக்க தேரர், தைவானின் சங்க நாயக்க வண. கலாநிதி போதகம சந்திம தேரர், கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் தியவடன நிலமே நிலங்க தெல பண்டார, சிரேஷ்ட அதிகாரிகள், அழைப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் பெபிலியானவில் நடைபெற்ற வைபவங்களில் கலந்துகொண்டனர்.வரலாற்றுப் புகழ் பெற்ற பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவேனா, கோட்டே அரசர் ஆறாம் பராக்கிரம பாகுவால் அவரது தாயான ராணி சுனேத்ரா தேவியின் நினைவாக கி.பி 1410 மற்றும் 1415 க்கு இடையில் கட்டப்பட்டது. அந்த அரசன் நாட்டை ஒருங்கிணைத்த மாபெரும் வீரனாவார்.

இலங்கையின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கல்வி நினைவுச்சின்னங்களில் ஒன்றான 600 ஆண்டுகள் பழமையான பிரிவெனா, பௌத்த பாரம்பரியம் மற்றும் இலக்கியத் துறைக்கு விலைமதிப்பற்ற சேவையை வழங்கியுள்ளது.