Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th June 2022 17:39:14 Hours

17 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு குச்சவெளியிலுள்ள குடும்பமொன்றிற்கு வழங்கி வைப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் திருகோணமலை, நிலாவளி, குச்சவெளி பகுதியை சேர்ந்த குடும்பமொன்றிற்காக 17 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த புதிய வீடொன்றினை 7 ஜூன் 2022 அன்று பயனாளிக் குடும்பத்தாருக்கு வழங்கி வைத்தார்.

குச்சவெளி பிரதேசத்தில் வசிக்கும் திரு டபிள்யூ கெலும் கிருஷாந்த துமிந்த பீரிஸ் என்பவரின் குடும்பத்தார் எதிர்கொள்ளும் அவல நிலையை கருத்திற்கொண்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் குறித்த பகுதியில் சேவையாற்றும் படையினர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜயசங்க பெரேரா மற்றும் மதுஷா பெரேரா ஆகியோரின் நிதி உதவியை கொண்டு படையினரால் மேற்படி மனிதாபிமான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 17 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரின் ஆளணி வளம் மற்றும் தொழில்நுட்ப திறன்களை கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதிய வீட்டை திறந்து வைப்பதற்கான நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் புதிய வீட்டின் சாவியை பயனாளிகளிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில், 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரே, 221 வது பிரிகேட் தளபதி கேணல் அனுருத்த சோலங்கராச்சி, 17 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி, பயனாளி குடும்ப உறுப்பினர்கள், படையினர், கிராமத்தவர்கள் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.