Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th June 2022 14:00:49 Hours

இராணுவத்தினரி்ன் ஒருங்கிணைப்பில் காரைத்தீவு மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கல்

தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூர் டெங் நகாக் பூய் மற்றும் கீன் மெங் லாங் அறக்கட்டளை ஆகியவற்றின் ஸ்தாபகத் தலைவர் வண தலகல சுமணரத்ன தேரோவின் அனுசரணையுடன் 1500 உலர் உணவுப் பொதிகள் இராணுவ ஒருங்கிணைப்பு மூலம் அம்பாறை காரைத்தீவு பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு திங்கட்கிழமை (30) பகிர்ந்தளிக்கப்பட்டது.

24 வது படைப்பிரிவின் 18 வது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் படையினர் அந்த நிவாரணப் பொதிகளை காரைத்தீவு நகர் பல்நோக்கு மண்டபத்தில் வழங்கினர். இந்நிகழ்வின் போது அம்பாறை மாவட்ட தலகல ஸ்ரீ சித்தார்த்தா அறக்கட்டளையின் செயலாளர் வண. எதிமலே ஆனந்த தேரர் உட்பட நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் கிராம சேவை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் 24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம, 24 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி, 241 வது பிரிகேட் தளபதி, அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்துகொண்டனர்.