Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th June 2022 17:20:02 Hours

சிமிக் பார்க் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இரவு நேர உணவு வழங்கியது

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் ஆசிர்வாதத்துடன் 51 வது படைப்பிரிவின் தலைமையகத்தின் 513 வது பிரிகேட் படையினரால் 150 பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு அண்மையில் இரவு நேர உணவு வழங்கியது. இது மேலும் ஒரு சமூகம் சார்ந்த விருந்தோம்பல் திட்டமாக கருதப்படுவதுடன் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பூங்காவானது மே 22 அன்று திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கோப்பாய் பிரதேசத்திலுள்ள செல்வபுரம், யோகபுரம் மற்றும் பால்பண்ணி பிரதேசங்களில் உள்ள வரிய பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்வதற்காக 51 வது படைப்பிரிவின் தலைமையகப் படையினர் தாங்களாகவே இந்த நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

அந்த இரவு விருந்தின் போது, 513 வது பிரிகேட் தளபதி கேணல் ரிஸ்வி ராசிக் மற்றும் 51 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் அனஸ் அஹமட் ஆகியோர் மூலம் இலங்கை பொதுமக்களுக்கான பாரம்பரிய உடைகள், பழக்கவழக்கங்கள் , உணவு உட்கொள்ளும் பழக்க வழக்கங்கள் மற்றும் உணவருந்தும் நெறிமுறைகள் பற்றிய விளக்கத்துடன் விரிவுரையை நிகழ்த்தினர்.

குடாநாட்டில் முதன்முறையாக சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பூங்காவில் ஆரம்பமான செயற்திட்டத்தில் அப்போதைய 51 வது படைப்பிரிவின் தளபதியும் தற்போதைய இராணுவ செயலாளருமான மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.