Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

முன்னாள் போராளிக்கு மற்றுமொரு புதிய வீடு யாழ். படையினரால் நிர்மாணிப்பு

யாழ்.குடாநாட்டின் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது படைப் பிரிவின் 551 வது பிரிகேடினரால் புதன்கிழமை (27) ஆம் திகதி யாழ். பருத்தித்துறை, புலோலி பொதுப் பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளியொருக்கான புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

மனிதாபிமானமுள்ள இராணுவத்தின் வேண்டு கோளுக்கிணங்க ரோயல் கல்லூரி பழைய மாணவரான திரு விஷ் நடராஜ் அவர்களினால் வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் ஆசிர்வாதத்துடன், 55 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் பிரசன்ன ஞானரத்ன மற்றும் 551 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சிந்தக விக்கிரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் 16 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்களால் வீட்டின் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக இயன்றளவு வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறு தொலைநோக்கு சிந்தனையுடன் இராணுவ தளபதியவர்களால் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதற்கமைய முன்னாள் போராளிகளான திருமதி தங்கராசா தர்மராணி மற்றும் திரு குமாரகுலசிங்கம் பிரசாந்தன் ஆகியோர் 2009 மே மாதத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுக்கு ஆளாகியிருந்த நிலையில், வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவிக்கும் குடும்பத்தின் நிலை தொடர்பில் அறிந்துகொண்ட படையினரால் உதவிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் படைப்பிரிவு தளபதி மற்றும் பிரிகேட் தளபதி ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

551 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சிந்தக விக்ரமசிங்க அவர்களினால் பருத்தித்துறை பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி, பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அழைப்பாளர்கள் முன்னிலையில் பருத்தித்துறை புலோலியில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீடிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்து மத சம்பிரதாயங்களுக்கு மரபுகளுக்கு அமைவாக நடைபெற்ற நிகழ்வில் பயனாளி குடும்பத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.