Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

51 வது படைபிரிவினாரால் புதிய பல்நோக்கு சிமிக் பூங்கா யாழ் பொதுமக்களுக்கு அன்பளிப்பு

தற்போதுள்ள சிவில் மற்றும் இராணுவ ஒத்துழைப்பினை மேம்படுத்தும் முகமாக, 'இராணுவ வழி முன்னோக்கு வியூகம் -2020-2025' க்கு இணங்க யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவு தலைமையக படையினர், யாழ் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு, கல்வி உதவி, மற்றும் விளையாட்டுக்கான பிரத்தியேக சிவில் இராணுவ ஒத்தழைப்பு பூங்காவை(CIMIC) பரிசளித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (8) கோப்பாய் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்துகொண்டார்.

பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் உப அதிபராகப் பணியாற்றிய மறைந்த திரு. ஜே.எஸ். ராஜரத்தினத்தின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற அனுசரனையளர்களின் நிதியுதவியுடன் இராணுவத் தளபதி மற்றும் யாழ் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் வழிகாட்டலின் கீழ் 51 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க புதிய சிமிக் பூங்காவின் நிர்மாணப் பணிகளை முன்னெடுத்தார்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 51 வது படைத் தலைமையகத்தின் அழைப்பின் பேரில் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறப்பு பலகை ஒன்றைத் திரைநீக்கம் செய்து சிமிக் பூங்காவினை திறந்து வைத்தார். இப் பூங்காவினை திறந்து வைத்த அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்காவின் இளைஞர்களின் உடல் பயிற்சி, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வசதி, ஃபுட்சல் உட்புற கால்பந்து விளையாட்டு ஆடுகள வசதி, குழந்தைகளுக்கான நூலகத்துடன் கூடிய கல்வி ஒத்துழைப்பு பிரிவு, சுகாதாரம் மற்றும் மருத்துவ உதவி வசதி, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான பொழுதுபோக்கு செயல்பாடு வசதி மற்றும் அறிவை மாற்றுவதற்கான கலிஸ்தெனிக்ஸ் ஆகிய பிரிவிற்கான ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொன்டார்.

புதிய பூங்கா திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் இளைஞர்கள் மைதானத்தை மெருகேற்றும் விதமாக அன்றைய பிரதம விருந்தினர் முன்னிலையில் உள்ளக கால்பந்து போட்டியில் கலந்துகொண்டனர்.

கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப் பூங்கா வசதி வளாகமானது டெர்ரா கோட்டா பாதைகள், மலர் செடிகள் மற்றும் பண்முக விளையாட்டு உபகரணங்களுடன் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் அப்பகுதியில் அவர்களுக்கு "எமது முகாம்" என்ற தோழமை உணர்வை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

தளபதியின் தயாரான, நம்பகமான, பொருத்தமான, நெகிழ்ச்சியான மற்றும் மரியாதைக்குரிய வகையிலான 5 ஆர் (R) எண்ணக்குவிற்கமைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சிமிக் (CIMIC) பூங்கா யாழ் மக்களுக்கு ஒரு சிறந்த ஓய்வு மற்றும் புத்துணர்வு தளமாக காணப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியின் ஐந்தாண்டு மூலோபாயத் திட்டமான 'இலங்கை இராணுவ வழி முன்னோக்கு வியூகம் 2020-2025', திட்டமானது நிறுவனத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும், அந்தந்த பகுதிகளில் உள்ள தேவையுள்ள சமூகங்களுக்கு "நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் பாதுகாவலர்களாக" வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு நேர்த்தியான பாதை வழிவகுக்கிறது. தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை இவ்விடயத்தில் முக்கிய அம்சங்களாகும்.

இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் ஆகிய இருபாலருக்கும் 'ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உருவாக்குவதில் நாகரீகமான போக்கை பரிசளிக்கும் நோக்கில், சமூகம் தங்கள் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தி, இராணுவத்திற்கும் சமூகத்திற்கும் இடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான வழிமுறையாக' இத்திட்டமானது நவம்பர் 2021 இல் ஆரம்பி்க்கப்பட்டது.

இதேவேளை, சங்குலி வடக்கில் கடந்த வருடம் மோட்டார் வாகன விபத்தினால் கணவன் காலமான போதிலும் பொருளாதாரத் தடைகளுடன் கைகோர்த்து வாழ்க்கை நடத்தும் திருமதி ஆர் தயாபரன் விதவை பெண்ணுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடொன்றின் சாவியை இராணுவத் தளபதி கையளித்தார். இவ் விட்டு நிர்மாணிப்பு பணிகளை யாழ்ப்பாணத்தில் உள்ள தொழில்முனைவோரான திரு வாமதேவ யாகேந்திரனின் அனுசரணையால், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டதன் பின்னர், யாழ். பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள 51 வது படைப்பிரிவின் 511 வது பிரிகேட்டின் 9 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் தமது தொழில்நுட்பத் தகுதியுடைய மனிதவளத்தைப் பயன்படுத்தி நிர்மாணித்தனர்.

அதே இடத்தில், நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்த 20 வரிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை காலணிகளை விநியோகிக்க அன்றைய பிரதம விருந்தினர் அழைக்கப்பட்டார். அன்றைய பிரதம அதிதியான பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் 51 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த போது, நுழைவாயிலில் முறையான பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டதுடன் மேலும் அன்றைய நிகழ்வின் அடையாள சின்னமாக மரக்கன்று ஒன்றினையும் அவர் நட்டார். இதன் பின்னர் இராணுவத் தளபதி அவ்விடத்தை விட்டுச் செல்வதற்கு முன்னர் 51 வது படைப்பிரிவின் அதிதிகள் புத்தகத்தில் தனது என்னங்களையும் கையொப்பமிட்டு நினைவுகளை பதிவிட்டு சென்றார்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, வடக்கு முன்னோக்கு பராமரிப்புப் பகுதி தளபதி மேஜர் ஜெனரல் விந்தித மஹின்கந்த, 52 வது படைபிரிவு தளபதி பிரிகேடியர் உதய ஹேரத், 55 வது படைபிரிவு தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் இவ் விழாவில் கலந்துகொண்டனர்.