வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62 வது படைப்பிரிவின் கீழுள்ள 14 (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படை படையணியினர் பதவிய பிரதேச செயலகத்தின் நிதி உதவியை கொண்டு 'சௌபாக்ய வீடமைப்புத் திட்டத்தின்' கீழ் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தங்குமிடமின்றி வசதியின்றி வாழ்ந்து வந்த தோணிகல, பராக்கிரமபுர பகுதியைச் சேர்ந்த திருமதி ஏ.எம்.இந்திராணியின் குடும்பத்திற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்துகொடுத்தனர்.
இரு மகள்களின் தாயான குறித்த பெண்ணின் கணவர் சில காலத்திற்கு முன்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருந்தார். அதனையடுத்து சரியான இருப்பிடம் ஒன்று இல்லாத நிலையில் அல்லலுற்ற குறித்த பெண்ணின் நிலையை கருத்திற்கொண்டு படையினரால் அவர்களுக்கான இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, 62 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு இந்த வீட்டை நிர்மாணிக்கும் பணிகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்ததையடுத்து, 14 (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படை சிப்பாய்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை கொண்டு மேற்படி வீட்டின் நிர்மாணப் பணிகள் 621வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.கே.எஸ் பெரகும் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 14 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரியினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, பிரிகேட் தளபதி மற்றும் அரச அதிகாரிகள் முன்னிலையில் திருமதி ஏ.எம்.இந்திராணி மற்றும் அவரது பிள்ளைகளுக்கு புதிய வீடு வழங்கி வைக்கப்பட்டது.