யாழ். குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிவில் – இராணுவ ஒத்துழைப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாக இராணுவ ஒருங்கிணைப்பின் மூலம் கிடைக்கபெற்ற உதவிகளை கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 51 வது படைப்பிரிவினால் சித்தங்கேணி பிரதேசத்திலுள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சனிக்கிழமை (12) 10 சைக்கிள்கள் பகிர்தளிக்கப்பட்டன.
51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலுக்கமைய பொது போக்குவரத்து வசதிகளற்ற சண்டிலிப்பாய் பிரதேச செயலக பகுதியின் தொலைதூர பிரதேசங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக மேற்படி சைக்கிள்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
விவரங்களை வெளிப்படுத்த விரும்பாத நன்கொடையாளர் ஒருவரின் உதவியுடன் 11வது இலங்கை காலாட் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் கே.பி.சி.கே காரியவசம் மற்றும் அவரது சிப்பாய்களினால் சித்தாங்கேணி நல்லிணக்க நிலையத்தில் மேற்படி 10 சைக்கிள்களை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சித்தாங்கேணி நல்லிணக்க நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக 513 வது பிரிகேட் தளபதி கேணல் ரிஷ்வி ராஸிக் அவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு லெப்டினன் கேணல் கேபிசீகே காரியவசம் அவர்களுடன் இணைந்து 10 மாணவர்களுக்குமான சைக்கிள்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகளும் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.