Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st March 2022 20:33:06 Hours

23 வது படைப்பிரிவு படையினர் இளைஞர்களுக்கு பயிற்சியளிப்பு

கிரிகெட் பயிற்சியைப் பெறுவதற்கு மாணவர்களுக்கு முதல் வாய்ப்பை வழங்கும் வகையில், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 23 வது படைப்பிரிவின் 233 வது பிரிகேட் தலைமையகத்தின் தலைமையில் வாகரை மகா வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (15) பயிற்சி அமர்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு வாகரை மகா வித்தியாலயம் மற்றும் கதிரவெளி விக்னேஸ்வரம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கிரிகெட் (வன் பந்து) பயிற்சி அமர்வை 233 வது பிரிகேட் கட்டளைத் தளபதி பிரிகேடியர் வசந்த ஹேவகே ஆரம்பித்து வைத்தார்.இலங்கை கிரிக்கெட் கிழக்கு மாகாண பயிற்றுவிப்பாளர் ஜே.ஏ.எம்.பாசில் மற்றும் திரு.பி.கே.அன்வர்தீன் ஆகியோரால் பயிற்சி அமர்வு இடம்பெற்றது.

இந்த அமர்வில் இரு பாடசாலைகளைச் சேர்ந்த 35 மாணவர்கள் பங்குபற்றியதுடன் வாகரை பிரதேச மாணவர்கள் முதல் தடவையாக வன் பந்து கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 23 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த இதனை மேற்பார்வையிட்டார்.

233 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த ஹேவகே, 233 வது படைப் பிரிவின் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி, 6 வது கஜபா படைப்பிரிவின் இரண்டாவது கட்டளைத் தளபதி, பயிற்சிப் பணியாளர்கள், இரு பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.