Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th March 2022 17:05:32 Hours

இராணுவ மரியாதைக்கு மத்தியில் தேசப்பற்றுள்ள யாழ். சிப்பாயின் இறுதி கிரியைகள்

யாழ். மண்ணில் இருந்து இராணுவத்தில் இணைந்து 2 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் அர்ப்பணிப்புமிக்க சிப்பாயாக எட்டு வருடங்களுக்கும் மேலாக தனது தாய்நாட்டிற்கு சேவையாற்றிய ஒரு சிப்பாய், கடமையில் இருக்கும் போது சுகவீனமுற்று உயிர் நீத்தார் இவரின் இறுதிச்சடங்கு நிகழ்வு பூரண இராணுவ மரியாதைகளுடன் உடன் பணிபுரிபவர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அச்சுவேலி மயானத்தில் வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்றது.

அச்சுவேலி முத்துமாரி அம்மன் கோவிலடிப் பகுதியைச் சேர்ந்த சாதாரண சிப்பாய் என்.விவேக் 2014 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து சேவையில் ஈடுபட்டிருந்த போது சுகவீனமுற்றிருந்த நிலையில் வியாழக்கிழமை (3) காலமானார். தனது சேவையின் போது, இந்த தேசபக்தியுடைய சிப்பாய் தனது தோழர்கள் மற்றும் அவரது சகோதரர்களின் இதயங்களையும் மனதையும் வென்றார். அவர் 2 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் சேருவதற்கு முன்னதாக 7 வது பட்டாலியன் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர்களின் படையணியில் பணியாற்றினார்.

இலங்கை குடாநாட்டில் சேவையாற்றும் மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர்கள் படையணி மற்றும் 4 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர்கள் ஆகியோரின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் யாழ் பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மரியாதையான இராணுவ இறுதிச் சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மறைந்த சாதாரண சிப்பாய் என்.விவேக்கின் பூதவுடல் ஏந்திய இறுதி ஊர்வலம் அச்சுவேலி மயான வளாகத்தை வந்தடைந்ததையடுத்து, பாரம்பரிய இராணுவ மரியாதையுடன், சவப்பெட்டியை படையினர் துப்பாக்கி வண்டியில் ஏற்றிவந்ததுடன் இந்து முறைப்படி பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, சிரேஷ்ட அதிகாரிகள் பலருடன் இணைந்து இறுதிச் சடங்கில் பங்குபற்றிய பின்னர், மறைந்த சிப்பாயின் பெற்றோர் மற்றும் உறவினர்களைச் சந்தித்து அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.