Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th March 2022 16:57:58 Hours

13,000 தென்னம் பிள்ளைகள் நீராவிய இராணுவப் பண்ணையில் உற்பத்தி

தென்னை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து விவசாயம் மற்றும் கால்நடைப் பணியகத்தினால் நிர்வகிக்கப்படும் நீராவிய இராணுவ பண்ணையில் 13,000 தென்னை நாற்றுகளை உற்பத்தி செய்யும் திட்டம் 27 பெப்ரவரி 2022 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

முதலாவது இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு படையணி கட்டளை அதிகாரி லெப்டிணன் கேணல் எச்.வி.கே.டபிள்யூ அபேவிக்ரமவின் அழைப்பின் பேரில்,

விவசாயம் மற்றும் கால்நடை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷ் ராஜபக்ஷ இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டார்.