Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th March 2022 17:57:58 Hours

கோனாகன் ஆரவில் கஞ்சா தோட்டம் முற்றுகை

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில், 121 பிரிகேட் பிரிவின் 20 வது இலங்கை சிங்க படையினரும், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் உள்ள 12 வது படை பிரிவினரும் வெள்ளிக்கிழமை (4) கோனகன் ஆரா பகுதயில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கையையினை முற்றுகையிட்டனர்.

சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் காடுகளுக்குள் ரகசியமாக பயிரிடப்பட்ட சட்டவிரோத கஞ்சா செய்கையின் பெறுமதி சுமார் 30 லட்சம் ரூபாய் என மதிப்டைு செய்யப்பட்டுள்ளது. கோனாகன் ஆரா பொலிஸாரின் மேற்பார்வையில் படையினர் அனைத்து செடிகளையும் அழித்துள்ளனர். 121 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.யு.என்.சேரசிங்க, 20 வது இலங்கை சிங்க படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ஆகியோர் தனது படையினருடன் இந்த நடவடிக்கையை நடத்தி முடித்தார்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, மற்றும் 12 வது படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க ஆகியோர் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இணங்க நாட்டிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இவ் நடவடிக்கையினை உன்னிப்பாக மேற்பார்வை செய்தனர்.