Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th March 2022 18:57:58 Hours

முல்லைத்தீவில் சேவையாற்றும் படையினரின் பிள்ளைகளுக்கு சிவில் அனுசரணையாளர்கள் பரிசில்களை வழங்கல்

‘ரணவிரு அபிநந்தன பூஜா-2022’.செயற்திட்டத்தில் கொழும்பு ரோயல் கல்லூரியின் திரு பசாத் லொகுபாலசூரிய, கொழும்பு ரோயல் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம், வித்யார்த்த கல்லூரியின் பழைய மாணவ நண்பர்கள் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியோர் இணைந்து 68 வது படைப்பிரிவில் சேவையாற்றும் படையினரின் 207 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை பரிசாக வழங்கினர்.

கூட்டு அனுசரணையாளர்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து விலகி படையினரின் சேவை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டி நாட்டில் வெவ்வேறு இடங்களில் கற்கும் தங்கள் பிள்ளைகளின் சார்பாக 68 வது படைபிரிவு தலைமையகத்திற்கு அவர்களின் பெற்றோரை அழைத்த இந்த நன்கொடையை வழங்கினர். படையினரின் பிள்ளைகளும், கட்டளை நிறுவனங்களில் பணியாற்றும் சிவில் ஊழியர்களின் மகன்மார் மற்றும் மகள்மார் அந்த ஊக்கத்தொகையைப் பெற்றனர், இவ் ஊக்கத்தொகை பெரும் நிவாரணமாகக் கருதப்படுகிறது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் வழிக்காட்டுதலின் மூலம் 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார, 681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் என்.டி.பி குணதுங்க, 682 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கலப்பத்தி, மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கினர்.