Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th March 2022 21:54:59 Hours

இலங்கை இளம் தொழில்முனைவோர் சங்கத்தின் மகளிர் பிரிவு பொது கூட்டத்தின் சிறப்பு விருந்தினர்களாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் இராணுவத் தளபதி

இலங்கை இளம் தொழில்முனைவோர் சங்க மகளிர் பிரிவின் 16 வது பொதுக் கூட்டம், தலவத்துகொட கிராண்ட் மொனார்க் ஹோட்டலில் நடைப்பெற்றது. இதில் கௌரவ விருந்தினர்களாக பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா , இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் மற்றும் நலன் விரும்பிகள் உட்பட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சில காலத்திற்கு முன்னர் சீதுவையில் மாபெரும் கொவிட்-19 சிகிச்சை நிலையத்தை நிறுவுவதில் இராணுவ சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து தீவிரமாக ஈடுபாடு காட்டிய இலங்கை இளம் தொழில்முனைவோர் சங்கத்தின் மகளிர் பிரிவு விழாவில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக வரவேற்றனர்.இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றுவதற்கு இராணுவத் தளபதி அழைக்கப்பட்டிருந்தார், அதில் அவர் சமூக வளர்ச்சிக்காகவும், நமது சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரின் குறைகளை நிவர்த்தி செய்யவும் இலங்கையின் இளம் தொழில்முனைவோர் சங்கத்தின் மகளிர் பிரிவின் பங்களிப்பைப் பாராட்டினார். விழாவின் முடிவில் இலங்கையின் இளம் தொழில்முனைவோர் சங்க மகளிர் பிரிவு உறுப்பினர்கள் திருமதி சுஜீவா நெல்சன், ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோருக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தனர்.

சமூக சேவைப் பிரிவான இலங்கை இளம் தொழில்முனைவோர் சங்க மகளிர் பிரிவு சமூகத்தில் தேவைப்பாடுடைய துறைகளின் நலனை இலக்காகக் கொண்ட சமூக சேவைத் திட்டங்களைத் தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் நிறைவு செய்துள்ளனர். அதன் தொண்டு இலக்குகளை ஆதரிக்கும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு இலங்கையின் இளம் தொழில்முனைவோர் சங்க மகளிர் பிரிவு நிதியளிக்கிறது. பொதுக் கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் இவ் அமைப்பு முதன்மையான கவனம் செலுத்துகிறது. இலங்கையின் இளம் தொழில்முனைவோர் சங்க மகளிர் பிரிவானது சமூகங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அதன் முக்கிய வணிகமான வீட்டு மேம்பாட்டுடன் ஒத்துப்போவதற்கும் உறுதிபூண்டுள்ளது. ஒளிமயமான எதிர்காலம் மற்றும் வலுவான சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு கல்வியே அடிப்படை என்று இலங்கையின் இளம் தொழில்முனைவோர் சங்க மகளிர் பிரிவு நம்புகிறது. கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான அதன் நீண்டகால உறுதிப்பாடு, தகவல் தொழினுட்ப கல்வியறிவு மற்றும் பிற கல்வி மானியத் திட்டங்களுக்கான அதன் பங்களிப்பாது சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆற்றிய முழு உரை பினவருமாறு;

இலங்கையின் இளம் தொழில்முனைவோர் சங்க மகளிர் பிரிவு தலைவர், உறுப்பினர்கள், அழைப்பாளர்கள் மற்றும் சீமான்களே சீமாட்டிகளே

இனிய மாலை வணக்கம்

இலங்கையின் இளம் தொழில்முனைவோர் சங்க மகளிர் பிரிவின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் இங்கு நின்று சில வார்த்தைகள் பேசுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முதலில் இந்த அற்புதமான மாலைக்கு என்னையும் என் மனைவியையும் அழைத்ததற்காக ஏற்பாட்டுக் குழுவிற்கும் செல்வி.ஷெஹானிக்கும் நன்றி கூறுகிறேன்.இலங்கையின் இளம் தொழில்முனைவோர் சம்மேளனம், மகளிர் பிரிவு இலங்கை ஆயுதப் படைகளுடன் மிகவும் ஒன்றிணைந்து செயற்படும் வெளி நிறுவனங்களில் ஒன்றாகும். இது இலங்கையில் பாதுகாப்பான, பாராமரிப்பான, அக்கறை மற்றும் இணக்கமான வாழ்க்கையை வழங்குவதற்கு தாராளமாக பங்களிக்கிறது. அமைதியிலும் மோதலிலும் நீங்கள் நீட்டிய தொண்டு கரம் தனிப்பட்ட முறையில் என்னாலும் எனது கட்டளைகளின் கீழும் மிகவும் பாராட்டப்பட்டது மற்றும் மதிக்கப்படுகிறது.

சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் நீச்சல் தடாகம் மற்றும் சில உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பதில் நீங்கள் அதிகளவான ஆதரவினை வழங்கினீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சீதுவையில் பாரிய கொவிட் 19 சிகிச்சை நிலையத்தை கட்டியெழுப்புவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் இலங்கை இராணுவத்திற்கு வழங்கிய மகத்தான பங்களிப்பிற்காக இலங்கையின் இளம் தொழில்முனைவோர் சங்க மகளிர் பிரிவிக்கு எனது மிக உயர்ந்த நன்றியை செலுத்த வேண்டும். ஒரு மணித்தியாலயத்தில் தேவைக்காக உங்களது பங்களிப்பின் ஊடாக இலங்கை பிரஜைகளின் பல உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.இதுபோன்ற முயற்சிகளில் உங்கள் ஈடுபாடு பணத்தை விட பெறுமதி வாய்ந்தது என்று நான் கூறுவேன். இது குடிமக்கள் மீதான அர்ப்பணிப்பு, மற்றவர்களின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறந்த எதிர்காலம் பற்றியது. இலங்கையின் இளம் தொழில்முனைவோர் சங்கத்தின் முக்கிய உணர்வாகவும், இனிவரும் காலத்திலும், பெண்களுக்கான புதிய வழிகளை நீங்கள் தொடர்ந்து வழிநடத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த ஆண்டு, வருடாந்த பொதுக் கூட்டம், புதிய அதிகாரிகளை நியமிப்பதற்கும், கலந்துரையாடுவதற்கும், புதிய உத்திகள், புதிய திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களை உருவாக்குவதற்கும் அடுத்த ஆண்டில் இலங்கையர்களுக்கு சேவை செய்வதற்கான பாதைகளை வகுத்துள்ளது என்று நம்புகிறேன்.

சீமான்களே சீமாட்டிகளே

இளம் இலங்கை தொழில்முனைவோர் சங்க மகளிர் பிரிவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியை வாழ்த்துவதற்கு நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். தொண்டு நிறுவனமாக இலங்கையின் இலங்கை இளம் தொழில்முனைவோர் சங்க மகளிர் பிரிவின் புகழ், மரியாதை மற்றும் சிறப்பை அவர்கள் தொடர்ந்து பேணிப் பாதுகாத்து மேம்படுத்துவார்கள் என்றும் நம்புவதோடு மேலும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தளபதி என்ற முறையில், கொவிட் -19 அச்சுறுத்தலின் உச்சக்கட்டத்தின் போது எங்களுடன் இருந்ததற்காக இலங்கை இளம் தொழில்முனைவோர் சங்க மகளிர் பிரிவிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், இது நம் அனைவருக்கும் கடினமான காலமாக காணப்பட்டது. நமக்கு முன்னால் ஒரு சவாலான காலம். இந்த நாட்டை சிறந்த இடமாக மாற்ற இளம் இலங்கை தொழில்முனைவோர் சங்கம் தனது நற் பணியை தொடரும் என்று நான் நம்புகிறேன்.

எனவே, உங்கள் அனைவரையும் அதே மனப்பான்மையைக் கடைப்பிடிக்கவும், தொடர்ந்து பங்களிக்கவும், வரவிருக்கும் தலைமுறைக்கு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப உங்களை அர்ப்பணிக்கவும் நான் உங்களை அழைக்க விரும்புகிறேன். இறுதியாக, இளம் இலங்கை தொழில்முனைவோர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பான எதிர்காலம் மற்றும் இன்றிரவு அனைவருக்கும் இனிமையாக அமையட்டும் இனிய இரவு வணக்கம்.